Meanwhile, Vinayaga realised his disadvantage and thought of a solution. He went around his father and mother and worshipped them. Then Lord Shiva asked his son Lord Ganapati, “Vinayaga! What did you do?” Saying to his father and mother, “Because of you only, this world arises and falls. Father and mother are the world,” he claimed the prize fruit. Shiva and Uma were pleased by this act of Vinayaga and presented the fruit to him. |
பிரணவ மந்திரத்தின் சொரூபமாய் விளங்கும் மூஷிக வாகனனோ இந்த உலகின் அனைத்து உயிர்களிலும் உள்ளவரே இறைவன் என்பதினால் அம்மையப்பராக அமர்ந்திருந்த தந்தையையும், தாயையும் நொடிப் பொழுதில் சுற்றி வந்து அவர்கள் முன் சென்று அவர்களை வணங்கி நின்றார். 'விநாயகா, நீ செய்தது என்ன?' என்று பரமன் கேட்க, கணபதியோ 'தாங்களே இந்த உலகமாக இருக்கின்றீர்கள். உங்களிடத்தில் இருந்துதான் அனைத்து உயிர்களும் பிறப்பு எடுத்து அழிவையும் சந்திக்கின்றன. அதனால் தங்களை வலம் வருவதும் உலகை சுற்றுவதும் ஒன்றே' என்றார். அதைக் கேட்ட அங்கிருந்த தேவர்களும், பிற கடவுட்களும் அதை பாராட்ட, அம்மையப்பன் உவகை அடைந்து மாம்பழத்தை வினாயகருக்குக் பரிசாகக் கொடுத்து வாழ்த்தினார். |