![]() |
|||||||||||||||
| |||||||||||||||
பழனி மலை ஆலய பாத யாத்திரை:
|
![]() |
|
தை பூச திருவிழாவில் பாதயாத்திரையை மேற்கொள்ளும் மக்கள் | |
![]() |
|
பழனி ஒரு புண்ணிய பூமி. சித்தர்கள் வாழந்திருந்த இடம். அதன் மீதுதான் அழகும் இளமையும் கொண்ட 'தண்டாயுதபாணி' என்ற முருகனை மலை உச்சி மீது இருந்த பதினெட்டு சித்தர்களில் ஒருவரான 'போகர்' என்ற சித்தர் பிரதிஷ்டை செய்து உள்ளார். 'போகர்' அற்புதமான சித்தர். 'இலாயிரம்' மற்றும் 'போகர் பன்னிராயிரம்' என்ற இலக்கியத்தை படைத்தவர். இன்றைக்கும் கூட யாருமே அறிந்திராத வகையில் உள்ள ஒன்பது நவபாஷம் என்ற கடுமையான விஷங்களைக் கொண்டு அந்த சிலையை செய்து உள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கில் மக்கள் வந்து அங்கு வணங்கும் வகையில் அந்த சிலை தெய்வீகத் தன்மையைப் பெற்று உள்ளது. அந்த சிலையை வந்து வணங்குவது புராணப் பழக்கங்களில் ஒன்று. 'திருமுறுகாற்றுப் படை'யில் 'மகாலஷ்மி', 'காமதேனு', 'இந்திரன்' போன்றவர்கள் 'அவினான்குடி' என்ற பழனிக்குச் சென்று வழிபட்டதாகக் கூறப்பட்டு உள்ளது. அந்த தெய்வ பழக்க முறையை தொடர்ந்தே மக்கள் இந்த மலை மீதான ஆலயத்திற்கு சென்று இந்தப் பிறவியில் வளம் பெற்று வாழவும் அடுத்த பிறவியின் இரகசியங்களை அறிந்து கொள்ளவும் செல்கின்றனர். 'அருணகிரிநாதர்' என்ற துறவி 'இகப்பரசுபாக்கியம் அருள்வாயா' எனப் பாடுகிறார்.
முருகனைப் பல வழிகளிலும் வழிபடலாம் என்றாலும் பக்தி மார்க வழிபாடே சிறந்த மார்கம். பாத யாத்திரை என்ற நடைப் பயணம் அதில் ஒரு மார்கம். கடவுளின் அருளைப் பெறுவதற்காகவே உண்மையில் பாத யாத்திரை செய்கின்றனர். ஒவ் ஒருவருக்கும் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளன. அவரை வணங்குவதின் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை அவர் களைந்து விடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கலியுக வரதன் என்ற அவரை வணங்குகின்றனர்.
கீழ் குறிப்பிட்டு உள்ள குறைகளைக் களைபவர் என்ற நம்பிக்கையில் மக்கள் முருகனை அனைவரும் வணங்குகின்றனர்
இவற்றைப் பெறுவதற்கு பல் வேறு விதமான காணிக்கைகள், காவடி போன்றவற்றைக் கூட செய்து அவரை வணங்குகின்றனர்.
முருகர் பக்த பாத யாத்திரைக் குழு போன்றவை தமிழகம் முழுவதிலும் நகர புறங்களிலும், கிராமங்களிலும் உள்ளன. செட்டி நாடு, தேவக்கோட்டை மற்றும் காரைக்குடி பகுதிகளில் இருந்து வருடா வருடம் பெரும் எண்ணிக்கையில் பாத யாத்திரை செய்கின்றனர்.
தை பூசம் அல்லது பங்குனி உத்திரத் தருவிழாவின் பொழுது தை மாதம் அல்லது பங்குனியில் (January and April) இந்த பாத யாத்திரையை செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனைவரும் வந்து சேர்ந்த பின் முருகன் தோதிரப் பாடல்களைப் பாடிக் கொண்டும் , ஹரஹரா, ஹரஹரா, வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரா, ஞான தண்டாயுதப்பாணிக்கு ஹரோஹரா,என்று கோஷங்களை எழுப்புகிறார்கள். அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் உள்ள நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தண்ணீர் குடத்தை அவர்களின் தலை மீது புரோகிதர் வைக்கின்றார். அதைத் தீர்த காவடி என்று கூறுகின்றனர். பாத யாத்ரீகர்களின் குழு முருகனின் பாடல்களைப் பாடியவாறே நடக்கத் துவங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 25-30 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடக்கின்றனர். அநேகமாக தைப் பூசம் அல்லது பங்குனி உத்திரத்தில பழனியை சென்று அடையும் வகையில் நடந்து பழனி மலை அடிவாரத்தில் தங்குகின்றனர். அங்குள்ள ஷண்முக நதியில் குளித்தப் பின் மலையில் உள்ள முருகனை தரிசித்து அந்த புனித தண்ணீரை காணிக்கையாக தண்டாயுதபாணிக்கு செலுத்திய பின் அறியாமையை அகற்றும் அவருடைய அருள் கிடைக்க வேண்டுகின்றனர்.
தைபூசம் மற்றும் பங்குனி உத்திரத்தில் பழனிக்கு வரும் பக்தர்களின் எதிர்பார்ப்புகளின் சதவிகிதம்:
மொத்தம் - 100 சதவிகிதம்
பாத யாத்திரைகள் செய்வோர் நம் பண்டைய வழக்க முறைகளைப் பாதுகாக்கின்றனர். சமுதாயத்தில் இழுக்கு என்பது எல்லா இடங்களிலும் பரவி உள்ளது . எங்கு சென்றhலும் பாதுகாப்பற்ற நிலைமை . ஓற்றுமையே தற்பொழுதைய தேவை. பாத யாத்திரைகள் கிராமங்களில் மக்கள் ஒற்றுமைக்கு வழி வகுக்கின்றது. கிராமங்களே நமக்கு வழி காட்டும் மன்றங்கள். அவர்களே நம் சமூக, சமுதாய பண்பாட்டுக்க]ள பாதுகாத்து வருகின்றனர் என்பவைகளே என் கருத்துக்கள் எனக் கூறி இதை முடிக்கின்றேன்.
Dr. R. Kannan, M.A., DGT., DYN.
Department of Indian Culture
A.P.A. College of Arts & Culture,
Palani - 624 602 Tamil Nadu, India
|
Murugan Bhakti Network ©2021 All Rights Reserved |